இந்தியாவில் புதிப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் முன்னிலை மாநிலம்
July 28 , 2018 2313 days 1044 0
இந்தியாவில் இந்த ஆண்டில் அதிகமான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் மாநிலமாக கர்நாடகா உருவெடுத்துள்ளது. மார்ச் 2018-ன் படி மொத்த நிறுவிய திறனில்3 ஜிகா வாட்ஸ் (GW) ஆற்றலை உற்பத்தி செய்து இந்நிலையை கர்நாடகா மாநிலம் எட்டியுள்ளது.
இந்த அறிக்கையை ‘ஆற்றல் பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வுக்கான நிறுவனம்’ (The Institute For Energy Economics and Financial Analysis - IEEFA) தயாரித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தயாரிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலகிலேயே பெரிய சூரிய ஒளிப் பூங்காவானது கர்நாடகா மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தின் பவகாடாவில் ரூ. 16,500 கோடி முதலீட்டுடன் நிறுவப்பட்டுள்ளது.
இந்த 2000 மெகா வாட் திறன் கொண்ட பூங்காவின் பெயர் “சக்தி ஸ்தலம்” ஆகும்.