TNPSC Thervupettagam

புதிய ஐம்பது ருபாய் நோட்டுகள்

August 20 , 2017 2686 days 1062 0
  • மகாத்மா காந்தியின் உருவம் அச்சிடப்பட்ட புதிய 50 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கி அளித்த தகவலின் அடிப்படையில் , புதிய 50 ரூபாய் தாள்களின் அடிப்படை நிறம் ஒளிரும் நீல நிறத்திலும் , அதன் பரிமாணம் / அளவு 66 மில்லிமீட்டர் அகலமும் , 135 மில்லிமீட்டர் நீளமும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தாளின் பின்புறத்தில் நாட்டின் தலைசிறந்த பாரம்பரியத்தைச் சித்தரிக்கும் வகையில் ஹம்பி நகரில் இருக்கும் தேரின் சித்திரம் அச்சிடப்பட்டு இருக்கும் . மேலும் தாளின் பின்புறத்தில் இடம்பெறவிருக்கும் அம்சங்கள்:
    • ஸ்வச் பாரத் அமைப்பின் சின்னம்
    • ரூபாய் தாள் அச்சிடப்பட்ட ஆண்டு
    • தேவனாகிரி மொழியில் 50 என்ற எண் அச்சிடப்பட்டுள்ளது
    • ரூபாய் தாளில் பல்வேறு மொழிகள் இடம்பெறும் பகுதி
  • ரூபாய் தாளின் முன்புறத்தில் ரிசர்வ் வங்கியின் உத்தரவாதம் மற்றும் வாக்குறுதியுடன் சேர்த்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் கையெழுத்தும் அச்சிடப்பட்டு இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் சின்னம் ருபாய் தாளில் இடம்பெறும்.
  • ரூபாய் தாளின் முன்புறத்தில் ‘RBI’, ‘भारत’, ‘INDIA’ மற்றும் ‘50’ ஆகிய வார்த்தைகள் சிறிய எழுத்துக்களாகவும், வலது புறத்தில் அசோகா தூண் சின்னமும் அச்சிடப்படும்.
  • முந்தைய தொடரில் அச்சிட்டு வழங்கப்பட்ட 50 ரூபாய் பிரிவில் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளும் எப்போதும்போல் செல்லுபடி ஆகும் என்று ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்