2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் புத்தொழில் நிதி வழங்கீட்டின் தரவரிசையில் 10.8 பில்லியன் டாலர்கள் நிதி வழங்கீட்டுடன் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து 3.9 பில்லியன் டாலர்களுடன் மும்பை நகரமும், 2.6 பில்லியன் டாலர்களுடன் குருகிராம் ஆகியனவும் இடம் பெற்றுள்ளன.
டெல்லி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் அமைந்துள்ள புத்தொழில் நிறுவனங்கள் தலா 1.2 பில்லியன் டாலர் நிதியுதவியை வழங்கியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து 1 பில்லியன் டாலர் நிதி உதவியுடன் புனே இடம் பெற்று உள்ளது.
இந்தத் தரவுகளானது Tracxn எனப்படும் முன்னணி உலகளாவியச் சந்தை நுண்ணறிவு தளத்தினால் வழங்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் 46 யூனிகார்ன் நிறுவனங்களும் 2022 ஆம் ஆண்டில் 22 யூனிகார்ன் நிறுவனங்கள் பதிவாகியுள்ளன.