TNPSC Thervupettagam

இந்தியாவில் புலிகளின் உயிரிழப்பு 2024

August 5 , 2024 110 days 195 0
  • 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் ஜூலை 29 ஆம் தேதி வரை 81 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் புலிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை மிகவும் கணிசமாகக் குறைந்துள்ளது.
  • கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் 114 புலிகளின் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
  • இது புலிகளின் உயிரிழப்புகளில் பதிவான 29 சதவீத சரிவைக் குறிக்கிறது.
  • கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் 178 புலிகள் உயிரிழந்ததால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவான ஆண்டாக 2023 ஆம் ஆண்டு உள்ளது.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் இயற்கை காரணங்கள் மற்றும் வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் மொத்தம் 628 புலிகள் இறந்துள்ளன.
  • இதற்கிடையில், இந்த காலக் கட்டத்தில் மட்டும் 349 பேர் புலிகளின் தாக்குதலில் கொல்லப் பட்டனர் என்ற நிலையில் இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 200 பேர் உயிர் இழந்துள்ளனர்.
  • 2019 ஆம் ஆண்டில் 96 புலிகள், 2020 ஆம் ஆண்டில் 106, 2021 ஆம் ஆண்டில் 127, 2022 ஆம் ஆண்டில் 121 மற்றும் 2023 ஆம் ஆண்டில் 178 புலிகள் இறந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்