TNPSC Thervupettagam

இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் 2024

January 11 , 2025 11 days 85 0
  • 'இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் 2024' (TCWI) என்பதின் மூன்றாவது பதிப்பு அறிக்கையில் பெங்களூரு நகரானது சென்னையை விஞ்சியுள்ளது.
  • பெங்களூருவைத் தொடர்ந்து சென்னை, மும்பை, ஐதராபாத் மற்றும் புனே ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், மதுரை, சேலம் ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 8 நகரங்கள் இந்தக் குறியீட்டில் இடம் பெற்றுள்ளதுடன், தமிழ்நாட்டின் நகரங்கள் ஆனது இந்தக் குறியீட்டில் முதல் 25 இடங்களில் முன்னணி வகிக்கின்றன.
  • தெற்கு மாநிலங்கள் ஆனது அதிக உள்ளடக்க வாய்ப்புகள் கொண்ட பிராந்தியமாக உருவெடுத்து, சமூகம் மற்றும் தொழில்துறைகளில் பெண்களின் உள்ளடக்கத்தில் ஒப்பீட்டளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
  • தெற்கு மாநிலங்களின் சராசரி நகர உள்ளடக்க மதிப்பெண் 18.56 ஆகும்.
  • இதில் தெற்கு மாநிலங்களுக்கு அடுத்தபடியாக மேற்கு மாநிலங்கள் இடம் பெற்று உள்ளன (16.92).
  • மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்கள் சராசரியாக முறையே 11.79 மற்றும் 10.55 என்ற மதிப்பெண்களுடன் இந்தக் குறியீட்டில் பின்தங்கியுள்ளன.
  • வடக்கு மாநிலங்களுக்கான சராசரி நகர உள்ளடக்க மதிப்பெண் 14 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்