TNPSC Thervupettagam

இந்தியாவில் பொது அடிப்படை எழுத்தறிவு மதிப்பீடு

December 6 , 2024 23 days 82 0
  • தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் (NSS) 79வது சுற்றான “மிகவும் விரிவான வருடாந்திர மாதிரிக் கணக்கெடுப்பு, 2022–23” என்பது 2022 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதங்களுக்கு இடையில் நடத்தப்பட்டது.
  • இந்தியாவில் சுமார் 95.9% தனிநபர்கள் அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணறிவுத் திறன்களைக் கொண்டுள்ளனர்.
  • 95.3% கிராமப்புற நபர்களுக்கு அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணறிவுத் திறன் உள்ளது என்ற நிலையில் நகர்ப்புறங்களில் இது 97.4% ஆக உள்ளது.
  • கிராமப்புற ஆண்களில் 97.4% மற்றும் கிராமப்புறப் பெண்களில் 93.4% பேர் இந்த திறன்களைக் கொண்டுள்ளனர்.
  • நகர்ப்புறங்களில், 98% ஆண்களும், 96.7% பெண்களும் இந்த திறன்களை கொண்டு உள்ளனர்.
  • இதில் மிசோரம் (100%), கோவா (99.9%), மற்றும் சிக்கிம் (99.9%) ஆகியவை கல்வியறிவு விகிதத்தில் முன்னணியில் உள்ளன.
  • பீகார் (91.9%) மற்றும் உத்தரப் பிரதேசம் (92.3%) ஆகியவை இந்தத் தர வரிசையில் பின் தங்கி உள்ளன.
  • இதில் "பொது" என்ற ஒரு சொல் ஆனது, பொதுவாக முழு அல்லது கிட்டத்தட்ட ஒரு முழுமையான அளவிலான என்பதை (100 சதவீதத்திற்கு அருகில்) குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்