இந்தியப் போட்டி ஆணையமானது (Competition Commission of India - CCI) ‘இந்தியாவில் மின் வணிகம் குறித்த சந்தை ஆய்வு: முக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் குறிப்புக்கள்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, இணையப் பயனர்களின் எண்ணிக்கையானது 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அதிகரித்துள்ளது.
நாட்டில் மின் வணிகத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு இதுவே முதன்மைக் காரணமாகும்.
மின் வணிகத் துறையின் வருவாயானது 51% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகின்றது.
உணவுத் துறையில் விநியோக சந்தைப் பகுதிகள் 90% என்ற அளவில் உயர்த்தப் பட்டுள்ளன.
இந்தியாவில் மின் வணிகத் துறையானது 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இந்தியாவில் சுமார் 4757 மின் வணிகத் துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் (புதிதாக தொழில் தொடங்கிய நிறுவனங்கள்) உள்ளன.