TNPSC Thervupettagam

இந்தியாவில் முதல் முறையாக Bima-ABSA

February 28 , 2025 4 days 60 0
  • பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனம் ஆனது, BIMA-செயலி ஆதரவுடன் கூடிய தடுத்து வைக்கப்பட்ட தொகை (Bima-ABSA) என்ற ஒரு வசதியுடன் செயல்படும் முதல் காப்பீட்டு நிறுவனமாக மாறியுள்ளது.
  • காப்பீட்டுக் கொள்கைதாரர்களின் வசதியை மேம்படுத்துவதற்கும் அவர்கள் தவணை செலுத்துதல்களில் வெளிப்படைத் தன்மையை மிகவும் நன்கு உறுதி செய்வதற்கும் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் திட்டத்துடன் இந்த முன்னெடுப்பு ஒத்துப் போகிறது.
  • இந்த Bima-ABSA ஆனது, கொள்கைதாரர்கள் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடை முகத்தின் ஒற்றைமுறை கட்டாய (OTM) முறைமையினைத் தேர்வு செய்ய உதவுகிறது,  என்பதோடு இது அவர்களின் வங்கிக் கணக்கில் 2 லட்சம் ரூபாய் வரை ஒரு குறிப்பிட்ட தொகையைத் தடுத்து வைக்கும் முறைமையினை அங்கீகரிக்க அனுமதிக்கிறது.
  • ஒரு காப்பீட்டு நிறுவனமானது, இந்தக் காப்பீட்டு ஒப்பந்தச் செயல்முறையை நிறைவு செய்து அக்காப்பீடு முன்மொழிவை ஏற்றுக் கொண்டவுடன் மட்டுமே தொகையானது பற்று வைக்கப் படும்.
  • விண்ணப்பம் 14 நாட்களுக்குள் செயல்படுத்தப் படாவிட்டால் அல்லது நிராகரிக்கப் பட்டால், தடுத்து வைக்கப்பட்ட தொகையானது தானாகவே அவ்வாடிக்கையாளரின் கணக்கில் திரும்ப வைப்பு வைக்கப்படும்.
  • காப்பீடு கொள்கைப் பதிவு செய்பவர்களின் நிதி அணுகக்கூடியதாக இருப்பதையும், காப்பீடு கொள்கை வழங்கல் உறுதிப்படுத்தப்படும் வரையில் தொடர்ந்து வட்டியைப் பெறுவதையும் இது உறுதி செய்கிறது.
  • அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களும் மார்ச் 01 ஆம் தேதிக்குள் Bima-ASBA வசதியை வழங்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்