TNPSC Thervupettagam

இந்தியாவில் யானைகளின் நிலை 2022-23

October 10 , 2024 44 days 110 0
  • சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆனது, ‘இந்தியாவில் யானைகளின் நிலை 2022-23’ என்ற தலைப்பிலான அதன் யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை நிலுவையில் வைத்து உள்ளது.
  • இந்த வெளியிடப்படாத அறிக்கையின் தரவுகள் ஆனது கிழக்கு-மத்திய மற்றும் தெற்கு நிலப்பரப்புகளில் காணப்படும் யானைகளின் எண்ணிக்கையில் மிக அதிகப்படியான வீழ்ச்சியைக் காட்டுகின்றன.
  • தெற்கு மேற்கு வங்காளம் (84%), ஜார்க்கண்ட் (64%), ஒடிசா (54%) மற்றும் கேரளாவில் (51%) யானைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவு அளவானது குறிபிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது.
  • 2002 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் யானைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு ஆனது "மொத்த நேரடி எண்ணிக்கை" முறையில் கணக்கிடப்பட்டன.
  • 2002 ஆம் ஆண்டில் தென் மாநிலங்களில் “மறைமுக சாணக் கணக்கெடுப்பு முறை” அறிமுகப் படுத்தப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டில், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் ஒரு  தொகுதி அடிப்படையிலான கணக்கெடுப்பு மற்றும் சாணக் கணக்கெடுப்பு ஆகிய முறைகளை இணைத்து ஒரு கணக்கெடுப்பு நெறிமுறையைப் பயன்படுத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்