இந்தியாவில் வங்கி முறையின் போக்கு மற்றும் முன்னேற்றம் 2021-22
January 6 , 2023 689 days 330 0
இந்த அறிக்கையானது 1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி சட்டப் பூர்வமாக இணங்கும் வகையில் உள்ளது.
இது வங்கித் துறைகளின் (கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உட்பட) செயல்திறன் குறித்த தகவல்களை வழங்குகிறது.
இந்தியாவில் உள்ள பட்டியலிடப்பட்ட வணிகம் சார்ந்த வங்கிகளின் ஒருங்கிணைந்த நிதிநிலைகள் அறிக்கைகளில் ஏழாண்டு இடைவெளிக்குப் பிறகு 2021-22 ஆம் ஆண்டில் இரட்டை இலக்க அதிகரிப்பானது பதிவாகியுள்ளன.
2017-18 ஆம் ஆண்டில் உச்சத்தில் இருந்த பட்டியலிடப்பட்ட வணிகம் சார்ந்த வங்கிகளின் மொத்த வாராக் கடன்களின் (GNPA) விகிதம் ஆனது 2022 ஆம் ஆண்டின் மார்ச் மாத இறுதியில் 5.8% ஆகக் குறைந்து வருகிறது.