25 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் சுமார் 13,000 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான வனப்பகுதி ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது.
இந்தப் பகுதியானது டெல்லி, சிக்கிம் மற்றும் கோவாவின் ஒட்டு மொத்தப் புவியியல் பரப்பளவை விட அதிகமாகும்.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, 5,460.9 சதுர கி.மீ வனப்பகுதி பாதிக்கப் பட்டு உள்ள நிலையில், மத்தியப் பிரதேசமானது அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் அதிக வன ஆக்கிரமிப்பு கொண்ட மாநிலமாக உள்ளது.
அசாமில் 3,620.9 சதுர கி.மீ வனப் பகுதி ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 863.08 சதுர கி.மீ வனப் பகுதி ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது.
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 575.54 சதுர கி.மீ., அருணாச்சலப் பிரதேசத்தில் 534.9 சதுர கி.மீ. வனப் பகுதிகள் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன.
தமிழ்நாட்டில் 157.68 சதுர கி.மீ. வனப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
வனப்பகுதி அல்லது பதிவு செய்யப்பட்ட வனப்பகுதி (RFA) என்பது மரங்களின் பரவல் இல்லா விட்டாலும், அரசாங்கத்தால் மிக அதிகாரப்பூர்வமாக காடாக நியமிக்கப்பட்ட நிலத்தை உள்ளடக்கியது.
RFA மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
காப்புக் காடுகள் - வேட்டையாடுதல் மற்றும் மேய்ச்சல் போன்ற நடவடிக்கைகள் இங்கு பெரும்பாலும் தடை செய்யப்பட்ட நிலையில், இந்தப் பகுதி முழுமையான பாதுகாப்பைக் கொண்டுள்ளன.
பாதுகாக்கப்பட்ட காடுகள் - குறிப்பாக கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படாத சில நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் மற்றும்
வகைப்படுத்தப்படாத காடுகள் – காப்புக் காடுகளாகவும் அல்லது பாதுகாக்கப் பட்ட காடுகளாகவும் வகைப்படுத்தப்படாதவை.