TNPSC Thervupettagam

இந்தியாவில் விளம்பரத்திற்குப் பிறகு அசல் விலையினை வெளிப்படுத்துதல்

May 14 , 2024 66 days 120 0
  • "விளம்பரத்திற்குப் பிறகு அசல் விலையினை வெளிப்படுத்துதல்" என்ற நடைமுறை தொடர்பாக வாடிக்கையாளர்களை எச்சரிப்பதற்காக வேண்டி நுகர்வோர் விவகாரத் துறையானது சமீபத்திய எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
  • இந்தச் சூழ்நிலையில் ஒரு பொருளின் விலையின் ஒரு பகுதி மட்டும் ஆரம்பத்தில் விளம்பரப்படுத்தப்பட்டு, கொள்முதல் செயல்பாட்டில் மேலும் அதற்கான பல்வேறு கட்டணங்கள் கூடுதலாகச் சேர்க்கப் படும்.
  • விளம்பரத்திற்குப் பிறகு அசல் விலையினை வெளிப்படுத்துதல் நடைமுறை என்பது நிறுவனங்கள் ஒரு பொருளின் விலையின் ஒரு பகுதியை மட்டுமே விளம்பரப்படுத்தி, வாடிக்கையாளர் வாங்கும் செயல்முறையைத் தொடங்கிய பின்னர் இதர மற்ற கட்டணங்களை பின்னர் வெளிப்படுத்துகின்ற ஒரு விலை நிர்ணய நுட்பமாகும்.
  • இந்தக் கூடுதல் கட்டணங்கள் ஆனது உல்லாச தங்கும் விடுதிகளுக்கான கட்டணங்கள் அல்லது விருப்பத் தேர்வு வசதிகளின் மேம்படுத்தல்கள் மற்றும் பல்வேறு கூடுதல் வசதிகளுக்கான கட்டணங்கள் போன்ற கட்டாயக் கட்டணங்களாக இருக்கலாம்.
  • குறிப்பிடப்பட்ட விலை துல்லியமாக இல்லாத போது, நுகர்வோர் பல்வேறு தவறான பொருளாதார முடிவுகளை எடுக்க வழி வகுக்கும் மற்றும் நேர்மையானப் போட்டி நிறுவனங்களுக்குச் சாதகமற்ற விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்