இந்தியாவில் வெறுப்பினை உண்டாக்கும் பேச்சு நிகழ்வுகள் தொடர்பான அறிக்கை
April 4 , 2024 238 days 233 0
இந்தியா ஹேட் லேப் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராக 668 ஆவணப்படுத்தப்பட்ட வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
‘இந்தியாவில் வெறுப்பினை உண்டாக்கும் பேச்சு நிகழ்வுகள்’ என்ற தலைப்பிலான அறிக்கையில், 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 255 நிகழ்வுகள் பதிவு செய்யப் பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த எண்ணிக்கையானது 413 ஆக உயர்ந்துள்ளது என்ற நிலையில் இது 62% அதிகரிப்பாகும்.
இதில் 75% நிகழ்வுகளானது (498) பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் டெல்லியில் பதிவாகியுள்ளன.
36% (239) நிகழ்வுகள் "முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் நேரடிப் பேச்சுகளை உள்ளடக்கியது".
63% (420) நிகழ்வுகளில் " சதி கோட்பாடுகள், முதன்மையாக லவ் ஜிஹாத், நில ஜிஹாத், ஹலால் ஜிஹாத் மற்றும் மக்கள் தொகை ஜிஹாத்" பற்றிய பேச்சுகளும் அடங்கும்.
சுமார் 25% (169) வெறுப்புப் பேச்சுக்களானது முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களைக் குறி வைத்து பேசப்பட்ட நிகழ்வுகளாகும்.
மகாராஷ்டிரா (118), உத்தரப் பிரதேசம் (104), மத்தியப் பிரதேசம் (65), ராஜஸ்தான் (64), ஹரியானா (48), உத்தரக்காண்ட் (41), கர்நாடகா (40), குஜராத் (31), சத்தீஸ்கர் (21), மற்றும் பீகார் (18) ஆகியவை மிகவும் அதிக எண்ணிக்கையிலான வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் பதிவான முதல் 10 மாநிலங்கள் ஆகும்.