TNPSC Thervupettagam

இந்தியாவில் வேலையின்மை விகிதம்

November 7 , 2019 1718 days 876 0
  • இந்திய பொருளாதாரக்  கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy - CMIE) வெளியிட்டுள்ள தகவல்களின் படி அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8.5% ஆக உயர்ந்தது.  ஆகஸ்ட் 2016 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட வேலையின்மை விகிதத்தின் மிக உயர்ந்த அளவு  இதுவாகும்.
  • திரிபுரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் வேலையின்மையின் அளவு 20%க்கும் அதிகமாக உள்ளது (மிக உயர்ந்தது). வேலையின்மையின் அளவு தமிழ்நாட்டில் 1.1% ஆக உள்ளது (மிகக் குறைவு).
  • CMIE இன் புள்ளிவிவரங்கள் சமீபத்திய தொடர் தொழிலாளர் சக்தி ஆய்வுத் தகவல்களின் கணக்கீடுகளுடன் ஒத்துப் போகின்றன. இந்த அமைப்பானது ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை வேலையின்மை விகிதம் 6.1% என மதிப்பிட்டுள்ளது. இது கடந்த 45 ஆண்டுகளில் மிக மோசமான அளவாகும்.
  • தொடர் தொழிலாளர் சக்தி ஆய்வுத் தகவல் கணக்கெடுப்பு ஆனது 2017 ஆம் ஆண்டு முதல் மத்தியப் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு வழக்கமான வேலைவாய்ப்பு-வேலையின்மை பற்றிய ஒரு கணக்கெடுப்பு ஆகும்.

CMIE பற்றி

  • இந்தியப் பொருளாதாரக்  கண்காணிப்பு மையமானது ஒரு முன்னணி வணிகத் தகவல் அமைப்பு நிறுவனமாகும்.
  • இது முதன்மையாக ஒரு சுயாதீன கொள்கை அமைப்பாக  1976 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்