TNPSC Thervupettagam

இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் இணைய முடக்கம்

March 1 , 2025 3 days 54 0
  • 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் 84 இணைய முடக்கங்கள் பதிவாகியுள்ளன.
  • உலக ஜனநாயக நாடுகளிலேயே இது தான் மிக அதிகபட்ச ஒரு எண்ணிக்கையாகும் என்பதோடு இது இராணுவ ஆட்சியின் காரணமாக நாட்டில் இது போன்ற 85 இணைய முடக்கங்களை எதிர் கொண்ட மியான்மர் மட்டுமே இந்தியாவினை விஞ்சியுள்ளது.
  • Access Now எனப்படும் எண்ணிம உரிமைகள் அமைப்பானது இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • கடந்த ஆறு ஆண்டுகளில் உலகிலேயே மிகவும் அதிக எண்ணிக்கையிலான இணைய முடக்கங்களை எதிர் கொண்ட ஒரு நாடாக இந்தியா குறிப்பிடப் படாதது இதுவே முதல் முறையாகும்.
  • இந்த 84 முடக்கங்களில், 41 போராட்டங்கள் தொடர்பானவை, அவற்றில் 23 வகுப்புவாத வன்முறை காரணமாக அமல்படுத்தப்பட்டன.
  • மணிப்பூரில் தான் இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான முடக்கங்கள் (21) விதிக்கப் பட்டன, அதைத் தொடர்ந்து ஹரியானா (12) மற்றும் ஜம்மு & காஷ்மீர் (12) இடம் பெற்றுள்ளன.
  • கடந்த ஆண்டு 54 நாடுகளில், சுமார் 296க்கும் மேற்பட்ட அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட இணைய முடக்கங்கள் பதிவாகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்