TNPSC Thervupettagam

இந்தியாவில் KAVACH 4.0 பாதுகாப்பு அமைப்பு

September 30 , 2024 56 days 113 0
  • மத்திய இரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி, 10,000 இரயில் என்ஜின்கள் மற்றும் 9,000 கிலோ மீட்டர் இரயில் பாதைகளில் முதல் கட்டமாக KAVACH 4.0 பாதுகாப்பு அமைப்பு பொருத்தப்படும்.
  • இது 2030 ஆம் ஆண்டு டிசம்பர மாதத்தில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
  • சுமார் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கிய ஓர் இரயிலில் பொருத்தப்பட்ட கவாச் அமைப்பானது எச்சரிக்கை மண்டலம் பகுதிகளில் இரயிலின் வேகத்தைத் தானாகவே 120 கிமீ வேகத்திற்கு குறைத்து அந்தப் பகுதியில் இருந்து வெளியேறிய பிறகு 130 கிமீ வேகத்தில் மீண்டும் இயக்கத் தொடங்கியது.
  • ஓட்டுநரின் இடையீடு இல்லாமல் சிவப்பு நிற ஒளி சமிக்ஞை திரையாகும் பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவிலேயே இரயில் நிற்கும்.
  • ஓட்டுநர் ஒலி சமிக்ஞையினைப் பயன்படுத்தவில்லை என்றாலும் இருப்புப் பாதைக் கடப்புப் பகுதியை இரயில் கடக்கும் போது KAVACH தானாகவே அதனை ஒலிக்கச் செய்கிறது.
  • ஓட்டுநர் நிறுத்தாமல் கடக்க முயன்றபோதும் சிவப்பு நிற விளக்கு எரிந்ததும் இரயில் தானாகவே நிற்க செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்