மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமானது இந்தியாவை அறிக திட்டத்தின் (Know India Programme - KIP) 41 முதல் 46 வரையிலான நிகழ்ச்சிப் பதிப்பை துவங்கியுள்ளது.
9 நாடுகளிலிருந்து 40 இந்திய வம்சாவழியினர் (Persons of Indian Origin -PIO) தற்போது நடைபெற்ற “இந்தியாவை அறிக” திட்டத்தின் 46வது பதிப்பில் பங்கு பெற்றனர்.
இந்தியாவை அறிக திட்டத்தினுடைய 46-வது பதிப்பின் பங்களிப்பு மாநிலம் மத்தியப் பிரதேசம் ஆகும்.
இதுவரை இத்திட்டத்தில் 40 நிகழ்ச்சிப் பதிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தியாவைப் பற்றி இந்திய வம்சாவளியினர் அறிந்துக்கொள்ள, 18 முதல் 30 வயதினிற்கு இடையேயான இந்திய வம்சாவளி நபர்களுக்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் 2004 ஆம் ஆண்டு “இந்தியாவை அறிக ” திட்டம் ஏற்படுத்தப்பட்டது.