TNPSC Thervupettagam

இந்தியா-அமெரிக்கா - 2+2 பேச்சுவார்த்தை

June 26 , 2018 2248 days 637 0
  • அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் C.யில் 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6-ஆம் தேதி இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே 2+2 துவக்க பேச்சுவார்த்தை (2+2 Dialogue) நடைபெற உள்ளது.
  • இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான 2+2 பேச்சுவார்த்தையின் நோக்கம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு முக்கியத்துவ ஒருங்கிணைவை (Strategic Coordination) மேம்படுத்துவதும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையினை (peace and stability) பராமரிப்பதும் ஆகும்.
  • இந்தப் புதிய பேச்சுவார்த்தை வடிவிலான முயற்சியானது, இரு நாடுகளுக்கிடையே இதற்கு முன் இருந்த இந்திய-அமெரிக்கப் பாதுகாப்பு முக்கியத்துவ மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தையை (India-US Strategic and Commercial Dialogue) பதில் இடமாற்றம் செய்யும்.
  • இப்புதிய பேச்சுவார்த்தை வடிவமானது, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர்களிடையேயான இந்தியா-ஜப்பான் 2+2 பேச்சுவார்த்தை (India-Japan 2+2 dialogue) வடிவினை ஒத்ததாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்