TNPSC Thervupettagam

இந்தியா-ஆசியான் எண்ணிமச் செயல்பாட்டுத் திட்டம் 2023

March 8 , 2023 502 days 238 0
  • இந்தியாவுடனான 3வது ASEAN எண்ணிம அமைச்சர்கள் (ADGMIN) கூட்டமானது காணொளி வாயிலாக நடைபெற்றது.
  • இந்தக் கூட்டத்தின் போது 2023 ஆம் ஆண்டு இந்தியா-ஆசியான் எண்ணிமச் செயல்பாட்டுத் திட்டமானது அங்கீகரிக்கப் பட்டது.
  • இந்தத் திட்டத்தில், இணையவெளிப் பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு, அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்த திறன்மிகு நகரங்களில் இணைய உலக வலை அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் திறன் மேம்பாடு மற்றும் தகவல் பகிர்வு மற்றும் எண்ணிம வளம் & பாதுகாப்பு ஆகியவற்றினைச் செயல்படுத்துவதில் தகவல்தொடர்புத் தொழில்நுட்பங்களின் பங்கு ஆகியவை அடங்கும்.
  • இந்தக் கூட்டத்திற்கான கருத்துரு, "நிலையான எண்ணிமம் சார்ந்த எதிர்காலத்தை நோக்கிய ஒருங்கிணைப்பு" என்பதாகும்.
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மற்றும் ASEAN கூட்டமைப்பு நாடுகள் ஆகியவற்றிற்கு இடையிலான பலத்தை மேம்படுத்துவதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்