TNPSC Thervupettagam

இந்தியா ஆசிய கோப்பை சாம்பியன்

October 23 , 2017 2638 days 931 0
  • வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
  • இந்தியா ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்வது இது 3வது முறையாகும். இதற்கு முன் 2003 மற்றும் 2007ல் ஆசியக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது.
  • பிளே ஆஃப் சுற்றில் 6-3 என்ற வித்தியாசத்தில் தென் கொரியாவை வீழ்த்தி பாகிஸ்தான் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
ஆசிய ஹாக்கி கோப்பை
  • ASHF ஆசியக் கோப்பையானது ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி பிரிவினருக்கான சர்வதேச ஹாக்கிப் போட்டியாகும். ஆசிய ஹாக்கி சம்மேளத்தினால் (Asian Hockey Federation-ASHF ) இது நடத்தப்படுகிறது.
  • ஆண்களுக்கான ஆசியக் கோப்பை போட்டி 1982 ல் தொடங்கப்பட்டது. பெண்களுக்கான ஆசிய கோப்பை சாம்பியன்ஷிப் அதிகாரப்பூர்வமற்ற போட்டியாக 1983-ல் தொடங்கப்பட்டது. பின் 1985ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
  • ஆசிய கோப்பையில் ஆண்கள் பிரிவில் 4 முறை சாம்பியன் பட்டமும், பெண்கள் பிரிவில் 3 முறை சாம்பியன் பட்டமும் பெற்று கொரியா பலம் வாய்ந்த அணியாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்