TNPSC Thervupettagam

இந்தியா – ஆப்பிரிக்கா : IAIARD

April 3 , 2019 2065 days 594 0
  • தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி ஆலோசக சேவை வங்கியுடன் இணைந்து நிலத்தால் சூழப்பட்ட ஆப்பிரிக்க நாடான மலாவியில் இந்திய-ஆப்பிக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தை (IAIARD - India-Africa Institute of Agriculture and Rural Development - IAIARD) இந்தியா அமைக்கவிருக்கிறது.
  • IAIARD ஆனது மலாவி மற்றும் இதர ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய ஆப்பிரிக்க நிறுவனமாக விளங்கும். மேலும் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது மனித வளங்கள் மற்றும் திறன் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பயிற்சி பெறவிருக்கின்றனர்.
  • இது வேளாண் நிதி மற்றும் நுண் நிதியியல் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்தவிருக்கிறது.
  • இந்தியாவால் ஆப்பிரிக்க நாட்டில் உருவாக்கப்பட்ட இது போன்ற வகையைச் சேர்ந்த முதலாவது நிறுவனம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்