இந்தியா - இலங்கை கூட்டு கடற்படைப் பயிற்சி - SLINEX 2017
September 7 , 2017 2670 days 869 0
இந்திய இலங்கை கடற்படை கூட்டுப் பயிற்சியின் 7வது பதிப்பு சிலிநெக்ஸ் (SLINEX) வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினத்திற்கு அருகே நடந்தது.
இந்த கூட்டுப் பயிற்சி இரு கடற்படைகளுக்கிடையே நெருங்கிய ஒத்துழைப்பையையும் இணைந்து செயலாற்றும் தன்மையையும் மேம்படுத்துகிறது.
SLINEX என்பது 2005ல் ஆரம்பிக்கப்பட்ட இருதரப்பு கூட்டு கடற்படைப் பயிற்சி ஆகும். 2005ல் இருந்து இந்தியாவில் மூன்று முறை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. 2011ல் இலங்கையின் உள்நாட்டுப் பாதுகாப்பின் காரணமாக இந்தப் பயிற்சி நிறுத்தப்பட்டது. இதன் மூன்றாவது பதிப்பு, SLINEX-13 கோவாவில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது.