இந்தியா மற்றும் உலக சுகாதார நிறுவனத்திற்கு (World Health Organisation -WHO) இடையேயான ஒப்பந்த குறிப்பாணைக்கு (Memorandum of Agreement -MoA) மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய அலுவலகமானது இந்தியாவில் உள்ள தனது அலுவலகத்தின் மூலம் உலக சுகாதார நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது.
இந்த இருதரப்பு ஒப்பந்த குறிப்பாணை ஆனது 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் புது டெல்லியில் கையெழுத்திடப்பட்டது.
இந்தியா மற்றும் உலக சுகாதாரத்திற்கு இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதே இந்த ஒப்பந்த குறிப்பாணையின் நோக்கமாகும்.
இந்தியாவில் உள்ள மக்களுடைய பொது சுகாதார நிலையை அதிகரிப்பதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.
உலக சுகாதார நிறுவனமானது 1948-ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது.
உலக சுகாதார நிறுவனமானது ஐ.நா.வின் வளர்ச்சி குழுவின் (United Nations Development Group) ஒரு உறுப்பினராகும்.
இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் அமைந்துள்ளது.
ஐ.நா.அவையின் சிறப்பு நிறுவனமான (specialized agency) உலக சுகாதார நிறுவனமானது சர்வதேச பொது சுகாதாரத்தின் ஒருங்கிணைப்பு ஆணையமாக (coordinating authority) செயல்படுகின்றது.