இந்தியா-ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகளின் சாதனையாளர்களுக்கான விருது
February 3 , 2023 816 days 441 0
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு சமீபத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பொருளாதாரம் மற்றும் அரசியல் வாழ்வில் அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக என்று லண்டனில் உள்ள இந்தியா-ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகளின் சாதனையாளர் விருதுகள் என்ற அமைப்பினால் இந்த விருதானது வழங்கப்படுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், முதன் முறையாக இந்தியா-ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய இரண்டு நாடுகளின் முக்கியச் சாதனையாளர்களுக்கான விருதுகள் ஆனது, 75 உயர் சாதனையாளர்களுக்கும், சில முக்கியச் சாதனையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.