TNPSC Thervupettagam

இந்தியா-ஐ.நா. வளர்ச்சி மேம்பாட்டு ஒத்துழைப்பு நிதியம்

February 5 , 2018 2488 days 760 0
  • தெற்கத்திய நாடுகளிடையே ஒத்துழைப்பை (South-South Co-operation) ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்தியா-ஐ.நா மேம்பாட்டு ஒத்துழைப்பு நிதியத்திற்கு (India – UN Development Partnership Fund) இந்தியா கூடுதலாக 1 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

நிதியம் பற்றி

  • வளரும் மற்றும் குறைவான வளர்ச்சியுடைய நாடுகளில் வறுமை மற்றும் பட்டினியை ஒழிப்பதற்கும், சுகாதாரத்தை அதிகரிப்பதற்கும், கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும், தூய்மையான குடிநீர் மற்றும் ஆற்றலுக்கு அணுகலை ஏற்படுத்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
  • இந்தியா மற்றும் தெற்கத்திய நாடுகளின் ஒத்துழைப்பிற்கான ஐ.நா. அலுவலகத்திற்கு (United Nations Office for South-South Co-operation) இடையேயான கூட்டிணைவின் கீழ் இந்த நிதியம் அமைக்கப்பட்டுள்ளது.
  • வளரும் மற்றும் குறைவான வளர்ச்சியுடைய நாடுகளின்   நீடித்த மேம்பாட்டிற்கான திட்டங்களுக்கு நிதியளிக்க இந்த நிதியம் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்