வருமானத்தின் மீதான வரிகளில் மேற்கொள்ளப்படும் வரி ஏய்ப்பை தடுக்கவும், இரட்டை வரி விதிப்பை தடுப்பதற்குமான இந்தியா மற்றும் கிர்கிஸ்தானுக்கு இடையே ஏற்கனவே உள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நெறிமுறைகளுக்கு (protocol) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வரி ஏய்ப்பு, இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு குறித்த தகவல்களை இரு நாடுகளுக்கிடையே தேவைப்படும்போது பரிமாறிக் கொள்வதை கட்டாயமாக்கும் விதமாக DTAA-ன் விதி 26ல் பத்தி 4 மற்றும் பத்தி 6 சேர்க்கப்பட்டு திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.