TNPSC Thervupettagam

இந்தியா சிங்கப்பூர் இடையிலான 60 ஆண்டு கால உறவுகள்

January 21 , 2025 6 hrs 0 min 35 0
  • 60 ஆண்டு காலத்திய அரசுமுறை உறவுகளைக் குறிக்கும் வகையில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இணைந்து ஒரு சிறப்பு கூட்டு முத்திரையினை வெளியிட்டுள்ளன.
  • 2004-05 ஆம் நிதியாண்டில் சுமார் 6.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 35.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக விரிவடைந்ததனால் சிங்கப்பூர் இந்தியாவின் 6வது பெரிய வர்த்தக கூட்டாளியாக மாறியது.
  • இந்தியா சிங்கப்பூரிலிருந்து சுமார் 21.2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளதோடு சிங்கப்பூருக்கு 14.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களையும் ஏற்றுமதி செய்துள்ளது.
  • 11.774 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரவுடன் இந்தியாவிற்கு வரும் அந்நிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய ஆதாரமாக சிங்கப்பூர் இருந்தது.
  • சிங்கப்பூரிலிருந்து (ஏப்ரல் 2000–செப்டம்பர் 2024) மேற்கொள்ளப்படும் ஒட்டு மொத்த அந்நிய நேரடி முதலீடு ஆனது 167.47 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது என்ற ஒரு நிலையில் இது இந்தியாவின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 24% ஆகும்.
  • சிங்கப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 9% பேர் இந்தியர்கள் ஆவர் (சுமார் 3.8 லட்சம்). கூடுதலாக 3.8 லட்சம் வெளிநாடு  வாழ் இந்தியர்கள் அந்நாட்டில் வசிக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்