TNPSC Thervupettagam

இந்தியா – ஜப்பான் ஆற்றல் உரையாடல்

May 6 , 2018 2299 days 667 0
  • 9-வது இந்தியா – ஜப்பான் ஆற்றல் உரையாடல் புதுதில்லியில் நடைபெற்றது.
  • மூன்றாவது மற்றும் ஏழாவது மிகப்பெரிய பொருளாதார நாடுகளான ஜப்பான் மற்றும் இந்தியா, பின்வருவனவற்றை கூட்டாக அங்கீகரித்துள்ளன.
    • நம்பகமான, தூய்மையான மற்றும் பொருளாதார ஆற்றலின் அணுகல் என்பது இவ்விரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று.
    • பருவநிலை மாறுபாடு மீதான ஐ.நா கட்டமைப்பு மாநாட்டின் ஆதரவின் கீழ் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை செயலாக்கம் செய்தல்
    • கார்பன் நீக்கத்தை (De-carbonisation) தெளிவாக உணர்வதற்காக ஹைட்ரஜன் உட்பட அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களின் உருவாக்கம் மற்றும் பயன்படுத்தலின் (deployment) முக்கியத்துவம்.
    • அடுத்த தலைமுறை / பூஜ்ஜிய உமிழ்வு (கரி) வாகனங்களின் மீதான கொள்கை பேச்சுவார்த்தைக்கு இசைவு அளிப்பதன் மூலம் மின்னணு வாகனங்களின் உருவாக்கத்தை நோக்கிய விவாதத்தை தொடங்குதல்.
    • இரு நாடுகளிலும் ஆற்றல் கலவையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியின் தொடர் முக்கியத்துவத்தை அறிவுறுத்தல்.
    • நிலக்கரி பயன்படுத்தும் ஆற்றல் நிலையங்களுக்கான (Coal – fired power plants) சுற்றுச்சூழல் அளவீடுகளின் மீதான கூட்டுறவை ஊக்குவித்தல்.
    • இலக்குக் கூறினை (Destination Clause) தளர்த்தல் மூலம் விரிவாக்கப்பட்ட மற்றும் வெளிப்படையான திரவ இயற்கை எரிவாயுவினை ஊக்குவித்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்