TNPSC Thervupettagam

இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்பாடு

September 7 , 2017 2634 days 914 0
  • இந்தியாவும் ஜப்பானும் பாதுபாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தியுள்ளன. இது 2018ல் நடைபெறும் இரு தரப்பு இராணுவத்திற்குமிடையேயான கூட்டு தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சிக்கும், இந்திய கப்பற்படை வீரர்களுக்கான நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கும் பயிற்சிக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும்.
  • மேலும் ஜப்பான் P1 என்ற கடற்பாதுகாப்பு விமானத்தை 2018ல் நடைபெற இருக்கும் மலபார் என்ற இந்திய, அமெரிக்க, ஜப்பானிய கடற்படைகள் பங்குபெறும் கூட்டு கடற்பயிற்சிக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளது.
  • மேலும் ஜப்பானிய தற்காப்புப் படையால் கண்ணிவெடி அழிப்புப் பயிற்சியினை அளிக்க இந்திய கடற்படைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் ஜப்பானின் டோக்கியோவில் இரண்டுநாட்கள் நடைபெற்ற இந்திய ஜப்பான் வருடாந்திர பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
  • இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஜோ அபே, சீனா முத்துச் சரங்கள் (String of Pearls) ஏற்பாட்டை இந்தியப் பெருங்கடலில் அமைப்பதைத் தடுக்க ஒரு ஜனநாயக வளைவை அல்லது அமைப்பை இதன் மூலம் உருவாக்குவதை வலியுறுத்துகிறார்.
  • சீனாவானது இந்தியப் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதி செய்வதால் இந்தியாவும் ஜப்பானும் கடந்த ஆண்டுகளில் இருந்த தங்கள் பாதுகாப்பு உறவுகளை இராணுவ கூட்டாளிகள் என்ற நிலைமைக்கு மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்