முதல் இந்தியா - தென் ஆப்பிரிக்கா வணிக மாநாடானது தென்னாப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சண்ட்டோன் மையத்தில் நடைபெறவுள்ளது.
மரபின் மூலம் ஒன்றிணைந்துள்ளோம், செழுமைக்காக ஒருங்கிணைந்துள்ளோம் - இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாறுகளை பிரதிபலித்தல் (United by Legacy, Unified for Prosperity - reflecting the shared histories of the two countries) என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், முதலீடு இந்தியா அமைப்பு, கௌடெங் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Gauteng Growth and Development Agency), இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு (of Indian Industry-CII) ஆகியவற்றுடனான கூட்டிணைவோடு இணைந்து இந்திய உயர் ஆணையம் (high commission of India) இந்த மாநாட்டை நடத்தவுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இடையேயான 25-வது வருட இராஜ்ஜிய ரீதியான உறவுகளின் தொடக்கத்தில் இந்தியா அல்லது தென்னாப்பிரிக்காவில் வணிக மாநாடு நடைபெற உள்ளது இதுவே முதன்முறையாகும்.