TNPSC Thervupettagam

இந்தியா-பிரான்ஸ் கடற்படை கூட்டுப் பயிற்சி

May 3 , 2019 1939 days 598 0
  • இந்தியா மற்றும் பிரான்சு நாட்டுக் கடற்படைகள் இணைந்து வருணா 19.1 எனும் கூட்டுப் பயிற்சியை நடத்துகின்றன.
  • இது மே மாதம் 1 முதல் 10 வரையில் கோவாவின் கடற்கரைப் பகுதியில் நடைபெறுகிறது.
  • இது இருதரப்பு கடற்படைப் பயிற்சியின் 17வது பதிப்பாகும்.
  • இந்தப் பயிற்சியானது இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.
  • இருதரப்பு சந்திப்பு, தொழில் முறை நிபுணர்களின் கலந்துரையாடல்கள், மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவை உள்ளிட்ட துறைமுகப் பயிற்சிக்கான பகுதியானது கோவாவில் நடைபெறும்.
  • கடற்பயிற்சிப் பகுதியானது கடற்படை நடவடிக்கைகளின் பல்வேறு தரப்புப் பயிற்சிகளை உள்ளடக்கியது.
  • 2-வது கட்ட கடற்படைப் பயிற்சியான வருணா 19.2 ஆனது மே மாத இறுதியில் டிஜிபோட்டியில்நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இருதரப்பு கடற்படைப் பயிற்சியானது 2001 ஆம் ஆண்டில் வருணா என்று பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்