இந்தியா-பிரான்ஸ் கல்லீரல் மற்றும் வளர்சிதை மாற்ற நோய் வலையமைப்பு
July 11 , 2024 139 days 134 0
இந்திய அரசானது, புது டெல்லியில் இந்தியா-பிரான்ஸ் கல்லீரல் மற்றும் வளர்சிதை மாற்ற நோய் வலையமைப்பினை (InFLiMeN) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வளர்சிதை மாற்றம் சார்ந்த கல்லீரல் நோய்களை தடுக்கும் என்பதோடு இதனைக் குணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மெய்நிகர் முனையாகும்.
இந்தியரில் ஒவ்வொரு மூன்றாவது நபருக்கும் அதிகொழுப்பு படிவு கல்லீரல் நோய் பாதிப்பு உள்ளது என்பதோடு இது இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் பிற வளர் சிதை மாற்றக் கோளாறுகளுக்கு முந்தைய நிலையாகும்.
மதுப் பழக்கம் சாராத அதி கொழுப்புப் படிவு கல்லீரல் நோய் (NAFLD) பாதிப்பானது சிரோசிஸ் மற்றும் முதன்மை கல்லீரல் புற்றுநோயாக மாறக் கூடும்.