பெங்களூருவில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டிற்கான இந்திய புத்தாக்க மாநாட்டில் கல்வி நிறுவனங்களுக்கான வகைப்பாட்டில் கிளாரி வேட் அனாலிடிக்ஸ் இந்திய புத்தாக்க விருது நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவகர்லால் நேரு மையத்திற்கும், (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research - JNCASR) மும்பையில் உள்ள இந்திய தொழிற்நுட்ப நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதானது இந்தியாவில் உள்ள முன்னணி 12 கண்டுபிடிப்பாளர்களில் IIT மும்பையையும் ஒன்றாக வகைப்படுத்துகின்றது.
அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள் வகைப்பாட்டில், 2018ஆம் ஆண்டிற்கான கிளாரிவேட் அனாலிடிக்ஸ் விருது CSIR (Council of Scientific and Industrial Research) மற்றும் உயிரி தொழிற்நுட்ப துறைக்கு (Department of Biotechnology) வழங்கப்பட்டுள்ளது.