TNPSC Thervupettagam

இந்தியா - பூடான் அரசாங்க ரீதியிலான உறவுகள்

February 24 , 2018 2465 days 841 0
  • இந்தியா மற்றும் பூடான் இடையே அரசாங்க ரீதியிலான உறவுகள் (Diplomatic relationship) நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் (பொன்விழா) நிறைவுற்றுள்ளதை அடுத்து  பொன்விழா  (2018) தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இதற்குமுன், இந்த விழாவைக் கொண்டாடுவதற்காக இருநாடுகளும் காணொளிக்காட்சி (Video Conferencing) மூலமாக விழா சின்னத்தை (logo) அறிமுகப்படுத்தின.
  • இந்த சின்னம் (logo) 5, 0 என்ற இரு எண்களைக் கொண்டது.
    • 5 ® பூடானின் சின்னம் டிராகனைச் சுற்றியது போல் உள்ளது
    • 0 ® இந்திய மூவர்ணக் கொடியின் சக்கரத்தைக் குறிக்கிறது.
  • இந்தியா தனது தூதரகத்தை திம்புவில் 1968 ஆம் ஆண்டு அமைத்ததன் மூலம் இருநாட்டு உறவுகள் நிறுவப்பட்டது.
  • இரு நாட்டு தூதரக உறவுகளின் அடிப்படைக் கட்டமைப்பானது 1949 ஆம் ஆண்டு இரு நாடுகளால் கையெழுத்திடப்பட்ட நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கை ஆகும். இந்த உடன்படிக்கை பிப்ரவரி 2007 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்