இந்தியா மற்றும் பூடான் இடையே அரசாங்க ரீதியிலான உறவுகள் (Diplomatic relationship) நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் (பொன்விழா) நிறைவுற்றுள்ளதை அடுத்து பொன்விழா (2018) தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்குமுன், இந்த விழாவைக் கொண்டாடுவதற்காக இருநாடுகளும் காணொளிக்காட்சி (Video Conferencing) மூலமாக விழா சின்னத்தை (logo) அறிமுகப்படுத்தின.
இந்த சின்னம் (logo) 5, 0 என்ற இரு எண்களைக் கொண்டது.
5 ® பூடானின் சின்னம் டிராகனைச் சுற்றியது போல் உள்ளது
0 ® இந்திய மூவர்ணக் கொடியின் சக்கரத்தைக் குறிக்கிறது.
இந்தியா தனது தூதரகத்தை திம்புவில் 1968 ஆம் ஆண்டு அமைத்ததன் மூலம் இருநாட்டு உறவுகள் நிறுவப்பட்டது.
இரு நாட்டு தூதரக உறவுகளின் அடிப்படைக் கட்டமைப்பானது 1949 ஆம் ஆண்டு இரு நாடுகளால் கையெழுத்திடப்பட்ட நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கை ஆகும். இந்த உடன்படிக்கை பிப்ரவரி 2007 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.