TNPSC Thervupettagam

இந்தியா - மங்கோலியா விண்வெளி ஒத்துழைப்பு ஒப்பந்தம்

January 11 , 2020 1688 days 751 0
  • அமைதியான மற்றும் பொதுமக்கள் பயன்பாடு (சிவில்) ஆகிய நோக்கங்களுக்காக விண்வெளியை ஆராய்வது மற்றும் பயன்படுத்துவது குறித்த இந்தியாவிற்கும் மங்கோலியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான ஒரு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது கிரகங்கள் குறித்த ஆய்வு, விண்வெளி அமைப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் இந்த இரு நாடுகள் இணைந்து பணியாற்ற அனுமதிக்கின்றது.
  • இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்), விண்வெளித் துறை, மங்கோலியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையம் ஆகியவற்றிலிருந்து சில உறுப்பினர்களை அழைத்து ஒரு கூட்டுச்  செயற்குழுவை ஏற்படுத்த இதில் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்