TNPSC Thervupettagam

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்

September 14 , 2023 439 days 372 0
  • இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (IMEE-EC) நிறுவுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இது பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்தச் செய்வதன் மூலம் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும்.
  • இது இரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள், எரிசக்தி விநியோக அமைப்புகள் மற்றும் தரவு இணைப்புகள் மூலம் அந்த இணைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது சீனாவின் மண்டலம் மற்றும் சாலை முன்னெடுப்பிற்கு மாற்றாக அமையும் அதே வேளையில் வர்த்தகம், தூய்மையான எரிசக்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டினை அதிகரிக்கவும் முயல்கிறது.
  • மத்திய கிழக்கு வழித்தடமானது, இரண்டு தனித்தனி வழித்தடங்களைக் கொண்டு உள்ளது.
  • கிழக்கு வழித்தடமானது இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள முந்த்ரா துறைமுகத்தினை ஃபுஜைரா துறைமுகத்துடன் இணைக்கும்.
  • பின்னர் சவூதி அரேபியா மற்றும் ஜோர்டான் வழியாக செல்லும் இரயில் பாதையைப் பயன்படுத்துவதன் மூலம் தரப்படுத்தப்பட்ட கொள்கலன்கள் மூலம் இஸ்ரேலியத் துறைமுகமான ஹைஃபாவிற்கு சரக்குப் பொருட்கள் கொண்டு செல்லப்படும்.
  • ஹைஃபாவில் இருந்து தொடங்கும் மேற்கு வழித்தடத்திலிருந்து இந்திய சரக்குப் பொருட்கள் பிரான்சு நாட்டில் உள்ள மார்சேய்லே போன்ற பல்வேறு துறைமுகங்களுக்கும், இத்தாலி மற்றும் கிரீஸ் நாடுகளின் மற்ற துறைமுகங்களுக்கும் சென்றடையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்