2017 ஆம் ஆண்டிலிருந்து கார்பன் வெளியேற்றமானது3 சதவீதம் அதிகரித்து, அதன் பங்களிப்பில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுக்க இருக்கின்றது.
2018 ஆம் ஆண்டில் உலக கார்பன் வெளியேற்றமானது எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மிக அதிக அளவாக 37.1 பில்லியன் டன்கள் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றம் என்ற இலக்கை அடைய இருக்கின்றது.
2018 ஆம் ஆண்டில் உலக அளவில் கார்பன் வெளியேற்றமானது 2.7 சதவீதமாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நிலக்கரி, வாயு மற்றும் எண்ணெய் வளங்கள் ஆகியவற்றின் நீடித்த பயன்பாட்டின் மூலம் ஏற்படுகிறது.
இந்த ஆய்வானது கிழக்கு அங்கிலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சர்வதேச கார்பன் திட்டம் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.
சீனா, அமெரிக்கா, இந்தியா, இரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, ஈரான், சவுதி அரேபியா, தென் கொரியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் 2018 ஆம் ஆண்டில் கார்பன் வெளியேற்றத்தில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.