"2024 ஆம் ஆண்டு விமானம் சார்ந்த ஈடுபாடுகளைப் பாதுகாத்தல் மற்றும் அமலாக்க மசோதாவிற்கு (கேப் டவுன் உடன்படிக்கை மசோதா)" மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு கேப் டவுன் உடன்படிக்கை (CTC) மசோதாவானது, 2008 ஆம் ஆண்டில் இந்தியா கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தத்தினைச் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஒரு ஒப்பந்தமானது, அடிப்படையில் இந்திய விமான நிறுவனங்கள் வாடகை செலுத்தத் தவறும் போது அல்லது அதிக கடன் சுமை ஏற்படும்போது விமானம் மற்றும் இயந்திரங்கள் போன்ற குத்தகைதாரர்களின் மிக விலையுயர்ந்த சொத்துக்கள் இங்கு சிக்கிக் கொள்ளாது என்பதை உறுதி செய்கிறது.