இந்தியா மற்றும் சுவீடன் இடையிலான 75 ஆண்டுகால உறவுகள்
November 25 , 2024 40 days 78 0
சுவீடன் நாடானது 75 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் நிலையான தொழில் துறை வளர்ச்சிக்கான பாதையில் அதிகளவிலான ஆதரவினை வழங்கி வருகிறது.
அவை மிகக் குறிப்பாக அதிக உமிழ்வு மற்றும் சிக்கலான கார்பன் நீக்கம் போன்ற சவால்கள் உள்ள துறைகளில் ஒத்துழைப்பினை மேற்கொள்கின்றன.
துபாயில் நடைபெற்ற CO P28 மாநாட்டில், இரு நாடுகளும் இந்தியா-சுவீடன் தொழில் துறை மாற்றக் கூட்டாண்மையை (ITP) தொடங்கின.
இது தொழில்துறை மாற்றத்திற்கான ஒரு தலைமைக் குழுவின் (LeadIT) இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும்.
எஃகு மற்றும் சிமெண்ட் உற்பத்தித் துறைகளில் மேற்கொள்ளப்படும் முதன்மையான திட்டங்களில் கவனம் செலுத்தி, இந்தியாவிலும் உலக அளவிலும் கனரகத் தொழில் துறைகளின் மாற்றத்தினை விரைவுபடுத்துவதை ITP நோக்கமாகக் கொண்டுள்ளது.