TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் செக் குடியரசுக்கிடையே ஐந்து ஒப்பந்தங்கள்

September 9 , 2018 2270 days 676 0
  • இந்தியா மற்றும் செக் குடியரசானது பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி, லேசர் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் விசா விதிமுறை தளர்த்தப்படுதல் ஆகிய ஐந்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
  • மேலும் இரு நாடுகளும் இராணுவப் பயன்பாடு அல்லாத அணுக்கரு ஆற்றல் ஒத்துழைப்பை தொடங்குவதற்காக ஒப்புக்கொண்டுள்ளன.
  • ஐந்து ஒப்பந்தங்கள்
    • இந்திய அறிவியல்சார் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி மன்றம் மற்றும் செக் அறிவியல் நிறுவனம் ஆகியவற்றிற்கிடையேயான ஒத்துழைப்பு.
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பல துறைகளில் இந்திய-செக் குடியரசின் திட்டங்களுக்கு உதவுதல். இந்தியாவின் சார்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செக் குடியரசிற்கு உதவும்.
    • தூதரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்காக விசா விதிமுறைகளை தளர்த்தலுக்கான ஒப்பந்தம்.
    • ELI பீம்லைன்ஸ் மற்றும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிற்கிடையேயான லேசர் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு.
    • ஹரியானா விவசாயப் பல்கலைக்கழகம் மற்றும் செக் வாழ்க்கை அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கிடையேயான ஒத்துழைப்பு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்