TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் நேபாளத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

September 2 , 2018 2181 days 619 0
  • நேபாளத்தில் நடைபெற்ற 4-வது பீம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியில் பீகாரின் ரக்சுல் நகரத்திற்கும் காத்மண்டுவிற்கும் இடையே ஒரு யுக்திசார்ந்த இரயில்வே பாதையை கட்டமைக்க இந்தியாவும் நேபாளமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த இரயில் பாதை இரு நாடுகளுக்குமிடையேயான இணைப்பை அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இரு நாட்டிற்குமிடையேயான மக்களுக்கு இடைப்பட்ட தொடர்பை அதிகப்படுத்திடவும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கவும் எண்ணுகிறது.
  • தவிர மேலும் 3 இரயில்பாதைத் திட்டங்கள் பட்டியலில் உள்ளன. அவை புதிய ஜல்பைகுரி-காகர்பிட்டா, நௌகான்வா – பாயிராஹவா மற்றும் நேபாள்கஞ்ச் சாலை- நேபாள்கஞ்ச் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்