TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் பெலாரஸ் – புரிந்துணர்வு ஒப்பந்தம்

September 28 , 2017 2672 days 902 0
  • எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்தியா மற்றும் பெலாரசுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் தலைமையிலான மத்திய கேபினேட் அமைச்சரவை (Ex-Post Facto Approval) பின்தேதியிட்ட  ஒப்புதலைத் தெரிவித்துள்ளது.
  • இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளையும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் இருநாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தப்படி – இரு நாடுகள் திறன் கட்டுமானம், தொழில்நுட்ப பரிமாற்றம், மேம்படுத்தப்பட்ட எண்ணெய் மீட்பு மற்றும் முதிர்ந்த எண்ணெய் வயல்களின் மேம்பாடு, கீழ்நிலை மற்றும் மேல்நிலை செயல்பாடுகளில் ஒத்துழைப்பை உண்டாக்குதல் போன்றவற்றில் இணைந்து செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்