TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் மலேசியா இடையே ரூபாய் மதிப்பில் வர்த்தகம்

April 9 , 2023 595 days 281 0
  • இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்வதற்கு இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
  • இந்தியா தனது சர்வதேச வர்த்தகத்தினை டாலர் மதிப்பிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சியானது உலகளாவிய வர்த்தகத்தின் மீதான வளர்ச்சியை எளிதாக்குவதையும், இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளச் செய்வதில் உலக நாடுகளின் நலன்களை கருத்தில் கொள்வதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இன்டர்நேஷனல் பேங்க் ஆஃப் மலேசியா ஆனது, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மூலம் ஒரு சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ வகை கணக்கைத் திறப்பதன் மூலம் இந்த வழி முறையைச் செயல்படுத்தியுள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் இந்தியா-மலேசியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஆனது 19.4 பில்லியன் டாலர் மதிப்பினை எட்டியது.
  • சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஆசியான் பிராந்தியத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்குதாரர் நாடாக மலேசியா திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்