இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து முத்தரப்பு போர் பயிற்சி
August 15 , 2017 2716 days 1020 0
இந்தியா மற்றும் ரஷ்யா, தங்களது ராணுவம், கடற்படை, மற்றும் வான்படை ஆகிய மூன்றினையும் இணைத்து மாபெரும் போர்ப் பயிற்சி ஒன்றினை நிகழ்த்த திட்டமிட்டுள்ளன. 19 முதல் 29 வரை நடக்க உள்ள இந்தப் பயிற்சியில், இரு தரப்பு படைகளும் வலுப்படும் என உறுதியளிக்கப்படுகிறது.
இது போன்ற அந்நிய நாட்டுடனான ஓர் முப்படைப்பயிற்சி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறை. மிகப்பெரிய அளவில் கடற்படை, தரைப்படை மற்றும் விமானப்படை ஆகியவை பங்கு கொள்கின்றன.
ரஷ்யாவின் கடல், ராணுவம் மற்றும் விமானப் படைகள் தனித்தனிப் பயிற்சியில் ஈடுபட உள்ளது.
இந்திரா கூட்டுப்பயிற்சி - இரு நாட்டு ராணுவ கூட்டுப்பயிற்சி
இந்திராநேவி கூட்டுப்பயிற்சி - இரு நாட்டு கடற்படை கூட்டுப்பயிற்சி.
அவியா இந்திரா கூட்டுப்பயிற்சி - இரு நாட்டு வான்படை கூட்டுப்பயிற்சி