TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் வங்காள தேசம் ஒருங்கிணைந்த ரோந்து (CORPAT) பணி

June 27 , 2018 2247 days 693 0
  • இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய இரண்டு அண்டை நாடுகளுக்கிடையேயான கடற்படைப் பயிற்சியை ஆண்டுதோறும் மேற்கொள்வதற்காக ஒருங்கிணைந்த ரோந்துப் பணியினை தொடங்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
  • இரண்டு நாடுகளின் கடற்படைகளின் ஒருங்கிணைந்த ரோந்துப் பணியின் (CORPAT-Coordinated Patrol) முதல் பதிப்பு முதன்மை கடற்படை அதிகாரி சுனில் லம்பாவின் வங்காள தேச விஜயத்தின் போது தொடங்கி வைக்கப்பட்டது.
  • CORPAT-ன் முதல் பதிப்பில் வங்காளதேசக் கடற்படையைச் சேர்ந்த இரண்டு போர்க்கப்பல்களும் (BNS Dhaleswari மற்றும் BNS Abu Bakar) இந்தியக் கடற்படையைச் சேர்ந்த இரண்டு போர்க்கப்பல்களும் (INS Kadmatt மற்றும் INS Satpura) பங்கெடுத்திருந்தன.
  • இந்தியக் கடற்படை CORPAT-ஐ வழக்கமாக இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மியான்மருடன் இணைந்து நடத்துகிறது.
  • மேலும், இந்தியக் கடற்படை மாலத்தீவுகள், மொரீசியஸ் மற்றும் ஷெஷல்ஸ் ஆகியவற்றின் கோரிக்கையின்படி பிரத்யேக பொருளாதார மண்டலத்தினைக் (EEZ-Exclusive Economic Zone) கண்காணிக்கும் பணியையும் நடத்துகிறது.
  • கடற்படைகளுக்கிடையேயான CORPAT தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் கப்பல்களைக் கண்டறிதல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுப்பணிகள் ஆகியவற்றில் ஈடுபடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்