TNPSC Thervupettagam

இந்தியா – மாலத்தீவுகள் – ஈகுவெரின் 2017

December 16 , 2017 2567 days 788 0
  • இந்தியா மற்றும் மாலத்தீவுக்கு இடையேயான ஈகுவெரின் எனும் பெயருடைய இரு தரப்பு இராணுவக் கூட்டுப் பயிற்சியின் 9ஆம் பதிப்பு அண்மையில் கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்றது.
  • இரு நாட்டு இராணுவங்களின் இணைந்து செயலாற்று தன்மையை மேம்படுத்துவதற்கும், பெலகாவியில் செயற்தன்மையுடைய கூட்டு செயல்பாட்டு மையத்தை தோற்றுவிக்க இரு நாட்டு இராணுவங்களுக்கு வாய்ப்பினை வழங்குவதற்கும் இந்த கூட்டுப்போர் பயிற்சி நடத்தப்படுகிறது.
  • ஈகுவெரின் என்றால் மாலத்தீவு மொழியில் நண்பர்கள் என பொருள்படும்.
  • பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் (Counter Insurgency and Counter Terrorism – CICT ops) மேல் முக்கியத்துவம் செலுத்தி இராணுவப் பயிற்சி மேற்கொள்வதற்காக இந்த ஈகுவெரின் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
  • 2000 ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளிலும் மாறிமாறி இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையே இந்த கூட்டுப்போர் பயிற்சி நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்