TNPSC Thervupettagam

இந்தியா ரஷ்யா இடையேயான புதிய கடல்வழிப் பாதை

September 14 , 2017 2666 days 965 0
  • இரஷ்யாவை இந்தியாவுடன் இணைக்கும் புது கடல் வழிப்பாதையை இந்தியா முன்மொழிந்துள்ளது.
  • இந்த புதிய கடல்வழிப்பாதை இந்தியாவை வடகிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசுபிக் பகுதிகளோடு இணைக்கவல்லது.
  • இந்த முன்மொழியப்பட்டுள்ள புது நேரடி கடல் வழிப்பாதையானது இந்தியாவின் சென்னை துறைமுகத்திலிருந்து இரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் இடையில் அமையும்.
  • நடப்பில், இந்தியாவிலிருந்து தூரத்திலுள்ள கிழக்கு இரஷ்யாவிற்கு சரக்கு போக்குவரத்தை ஐரோப்பாவின் வழியே மேற்கொள்ள வேண்டியுள்ளதால் 40 நாட்கள் ஆகின்றன. இதை ஒப்பிடுகையில் மொழியப்பட்டுள்ள புதிய பாதையில் சரக்கு போக்குவரத்து 24 நாட்களிலேயே மேற்கொள்ளப்படும்.
  • சீனாவின் இலட்சிய திட்டமான கடல்வழி பட்டு பாதை தொடக்கத்திற்கு போட்டியாகவும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் ஒரு பாலமாகவும் இத்தொடக்கம் கருதப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்