இந்தியா-வங்காளதேசம் நட்புறவுசார் குழாய் இணைப்புத் திட்டம்
March 27 , 2023
611 days
316
- இந்தியா மற்றும் வங்காளதேச நாட்டின் பிரதமர்கள் இந்தியா-வங்காளதேச நட்புறவு சார் குழாய் இணைப்புத் திட்டத்தினைத் தொடங்கி வைத்தனர்.
- இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு இடையேயான முதல் எரிசக்தி குழாய் இணைப்புத் திட்டம் இதுவாகும்.
- 131.57 கி.மீ. நீளமுள்ள இந்தக் குழாய் ஆனது மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இருந்து வங்க தேசத்தின் பர்பதிபூர் வரை செல்கிறது.
- இந்தக் குழாயானது, ஆண்டிற்கு 1 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவிற்கு அதிவேக டீசலைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது.
- இந்த எரிபொருள் இடம் பெயர்வு ஒப்பந்தமானது 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருப்பதோடு, மேலும் இதை நீட்டிப்பதற்கான வாய்ப்புகளும் இதில் உள்ளது.
Post Views:
316