TNPSC Thervupettagam

இந்தியா-வங்காளதேசம் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம்

September 13 , 2022 679 days 339 0
  • இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகியவை விரைவில் இருதரப்பு விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளன.
  • 2021-22 ஆம் ஆண்டில், தெற்காசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரராகவும், உலகளவில் இந்திய ஏற்றுமதிக்கான நான்காவது பெரிய நாடாகவும் வங்காளதேசம் உருவெடுத்துள்ளது.
  • இந்தியா வங்காளதேசத்தின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்குதாரராகவும், ஆசியாவிலேயே அதன் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாகவும் உள்ளது.
  • விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் ஆனது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதை ஒரு முக்கிய நோக்கமாக  கொண்டு அத்துடன் சரக்குகள், சேவைகள் மற்றும் முதலீட்டு வர்த்தகத்தில் கவனம் செலுத்தவும் வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்